சுவிஸ் நகரமொன்றில் தீயணைப்புத் துறைக்கு வந்த அழைப்பு: 11 நிமிடங்களில் நிகழ்ந்த துயரம்
சுவிஸ் நகரமொன்றில், வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த வீட்டை அடைய 11 நிமிடங்கள் ஆனது.
11 நிமிடங்களில் நிகழ்ந்த துயரம்
கடந்த வெள்ளியன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள Plan-les Ouates என்னுமிடத்தில், வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தீயணைப்புத்துறையினருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அவர்கள் அந்த வீட்டை அடைய 11 நிமிடங்கள் ஆகியுள்ளன. ஆனால், அந்த 11 நிமிடங்களில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டுக்குள் செல்ல, அங்கு ஒரு 97 வயது பெண்மணி சுயநினைவிழந்துகிடந்துள்ளார்.
அவரை வெளியே தூக்கி வந்து காப்பாற்ற மருத்துவ உதவிக்குழுவினர் முயற்சி செய்துள்ளார்கள்.
ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |