சுவிட்சர்லாந்தில் தேர்தலில் போட்டியிடும் இளம்பெண்: எதிர்பாராத இடத்திலிருந்து வந்த எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கும் நிலையில், எதிர்பாராத ஒரு இடத்திலிருந்து அவருக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் பெண்ணுக்கெதிராக துண்டுப் பிரதிகள்
சுவிட்சர்லாந்தின் Baselஇல் சுவிஸ் மக்கள் கட்சி தொடர்பில், சாரா (Sarah Regez, 29) என்னும் இளம்பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஆனால், தனக்கெதிராக துண்டுப்பிரதிகள் விநியோகிக்கபப்டுவது சாராவுக்கு தெரியவந்தது. சாராவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறும் அந்த துண்டுப் பிரதிகளை வெளியிட்டது யார் என பார்க்கப்போக, சாராவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.
WRS
ஆம், சாரவுக்கெதிராக துண்டுப் பிரதிகளை வெளியிட்டது வேறு யாருமல்ல, சாராவின் பாட்டிதான். விடயம் என்னவென்றால், சாராவின் பாட்டி, நீண்ட காலமாக உள்ளூர் கவுன்சிலில் Social Democrat கட்சியின் பிரதிநிதியாக இருந்துவருகிறார்.
தன் பேத்தி, வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளதை அறிந்து தான் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள சாராவின் பாட்டி, அதனால்தான் தான் தன் பேத்திக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தேர்தலில் எதிரெதிர் அணியில் நின்றாலும், தனிப்பட்ட முறையில் பாட்டியும் பேத்தியும் நல்ல உறவு வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
WRS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |