உங்கள் தொகுதி வேட்பாளரின் சொத்து மதிப்பு, குற்றப் பின்னணியை தெரிந்துகொள்ள புதிய App
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல்களை அறிய புதிய மொபைல் அப்ளிகேஷனை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள KYC (Know Your Candidate) என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டது.
வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் குற்றப் பின்னணி, சொத்து, கடன், கல்வி, பணி அனுபவம் போன்றவற்றை ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் திகதியை அறிவிக்கும் போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த செயலி பற்றிய தகவலை வெளியிட்டார்.
இந்த ஆப் Google Play Store மற்றும் Apple App Storeல் கிடைக்கிறது. நீங்கள் வேட்பாளரின் பெயர், மாநிலம் மற்றும் தொகுதியை உள்ளிட்டால், ஆப் மூலம் அவர்களைப் பற்றிய பிற தகவல்களைப் பெறலாம்.
வேட்பாளர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு வகை மற்றும் வழக்கின் தற்போதைய நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சிகள் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தையும் விளக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறியிருந்தார்.
தேர்தல் பணியில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இந்த செயலியின் நோக்கம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Election Commission Launches Know Your Candidate App, KYC Moble Application, Lok Sabha election Candidates, election Candidates net worth