160 கிமீ முதல் 220 கிமீ ரேஞ்ச்.., மிகவும் குறைவான விலையில் Electric Bikes அறிமுகம்
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமான கோமகி (Komaki), புதிய Electric Bikes-களை அறிமுகம் செய்துள்ளது.
Electric Bikes அறிமுகம்
கோமகி நிறுவனமானது ரேஞ்சர் என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், புதிதாக ரேஞ்சர் புரோ (Ranger Pro) மற்றும் ரேஞ்சர் புரோ+ (Ranger Pro+) என்கிற எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவை இரண்டும் க்ரூஸர் (Cruiser) ரக எலக்ட்ரிக் பைக்குகள் ஆகும். இதில் Ranger Pro Electric Bike-ன் விலை ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகவும், Ranger Pro+ Electric Bike-ன் விலை ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இவற்றுடன் நாம் ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலானAccessories-யும் பெறலாம். இவை இரண்டில் 4.2 kilowatts திறன் கொண்ட Lithium-iron-phosphate battery பொருத்தப்பட்டுள்ளது.
இதில், ரேஞ்சர் புரோ எலக்ட்ரிக் பைக்கில் 160-இல் இருந்து 220கிமீ ரேஞ்சையும், ரேஞ்சர் புரோ+ எலக்ட்ரிக் பைக்கில் 180கிமீ-இல் இருந்து 240கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம்.
மேலும், மொபைல் போனை சார்ஜ் செய்யும் வசதி, Turbo Mode மற்றும் கூடுதலாக 50-லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி போன்றவையும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |