பிரான்சில் சாலையிலே திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பேருந்து! வெளியான காணொளி
பிரான்சில் எலக்ட்ரிக் பேருந்து ஒன்று சாலையிலே திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் பாரிஸில் உள்ள தேசிய நூலகத்திற்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பாரிஸில் உள்ள பொது போக்குவரத்து இயக்குநரகம்(RATP) கூறிதயாவது, வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை முறியும் அபாயம்! உக்ரைன் எச்சரிக்கை
ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக எலக்ட்ரிக் பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. சில தினங்களுக்கு முன் இதே பொல்லூர் புளூபஸ் 5SE எலக்ட்ரிக் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது.
இதன் காரணமாக புளூபஸ் நிறுவனத்தின் 149 பேருந்துகளை பயன்படுத்துவதை RATP தற்காலிகமாக இடைநிறுத்துகிறது.
?INFO - #Paris : Une explosion au niveau du toit et en quelques secondes, le bus s'est embrasé... Une vidéo montre le départ de feu du bus électrique de la #RATP à Paris. L’incident n’a heureusement pas fait de blessé. ⤵️ pic.twitter.com/6G23W8NZxa
— FranceNews24 (@FranceNews24) April 30, 2022
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து பேருந்து தயாரிப்பு நிறுவனமான பொல்லூரிடம் முழு அறிக்கை கோரப்பட்டுள்ளது என RATP தெரிவித்துள்ளது.
RATP-யிடம் இருக்கும் 4,700 வாகனங்களில் 500 எலக்ட்ரிக் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.