சுவிட்சர்லாந்தில் 2021-ல் இதன் விற்பனை அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக டூரிங் கிளப் சுவிட்சர்லாந்து (TCS) கார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு மாற்று எரிபொருள் வாகனங்களின் விற்பனை (அனைத்து மின்சார, பிளக்-இன் ஹைபிரிட், பிற ஹைபிரிட் மொடல்கள் மற்றும் எரிவாயு-இயங்கும் வாகனங்கள்) மிகவும் அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் அனைத்து புதிய கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் இந்த மாற்று எரிபொருள் கார்கள் என கூறப்படுகிறது.
குறிப்பாக 2021 இறுதியில் இந்த வாகனங்களின் விற்பனை வலுவாக இருந்துள்ளது.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், முழு மின்சார வாகனங்கள் புதிய பதிவுகளில் 18.3% மற்றும் பிளக்-இன் வாகனங்கள் (எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட்கள்) 28% வரை எட்டியதாக டூரிங் கிளப் சுவிட்சர்லாந்து (TCS) தெரிவித்துள்ளது.
இந்த 18.3 சதவீதம் என்பது ஒரு மைல்கல் என்று TCS விவரித்தது. அதாவது மின்சார வாகனங்கள் அதன் முனைப்புள்ளியை (tipping point) தாண்டி விற்பனை ஆகியுள்ளதாக TCS கூறியது.
அடுத்த ஆறு மாதங்களில் இந்தப் போக்கு தொடரும் என்று கூறப்படுகிறது. அனைத்து மாற்று எரிபொருள் வாகனங்களும் 2022-ஆம் ஆண்டில் 50% விற்பனை வரம்பை மீறும் என்று அவர் மதிப்பிடப்படுகிறது.
மின்சார கார்களின் வேகமான வளர்ச்சி உலகளவில் சீரற்றதாகவே உள்ளது. இருப்பினும், சர்வதேச தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
Tesla, Hyundai மற்றும் Toyota ஆகிய மூன்று வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமே 2019 உடன் ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் விற்பனையில் அதிகரிப்பைக் கண்டுள்ளனர், மற்ற அனைத்து உற்பத்தியாளர்களும் போராடினர்.
கடந்த டிசம்பரில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தேச புதிய சுற்றுச்சூழல் சட்டத்தில் மொபைலிட்டி மற்றும் எலக்ட்ரிக் கார்கள் இடம்பெற்றுள்ளன.
இது சுவிட்சர்லாந்தின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 1990-ல் இருந்த அளவை விட 2030-ஆம் ஆண்டளவில் பாதியாக குறைக்கும் முயற்சியில் இயற்றப்படடுள்ளது.