350KM Range தரும் Tata Punch EV., வெளியீட்டு திகதி, அம்சங்கள் குறித்து வெளியான விவரங்கள்
Tata Punch EV அடுத்த மாதம் இந்தியாவின் மலிவான electric SUV காராக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tata Motors 2024 ஜனவரி கடைசி வாரத்தில் Punch EVஐ அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்ற. எனினும், நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
அறிக்கையின்படி, Punch EV என்பது நாட்டின் மலிவான முழு மின்சார SUV-ஆக இருக்கலாம். இது Citroen eC3 உடன் போட்டியிடும், இதன் விலை ரூ.11.61 லட்சத்தில் தொடங்கி ரூ.12.79 லட்சம் (Ex-Showroom Price) வரை செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tata Punch EV 350 கிமீ தூரம் வரை செல்லும்
Tata Punch EV-ல் 24kWh பேட்டரியை விட பாரிய பேட்டரியை நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால், Punch EV 350 கிலோமீட்டர் range தரும் என கூறப்படுகிறது.
ICE Punch காருடன் ஒப்பிடும்போது Punch EVல் அதிக அம்சங்களைக் காணலாம்.
ICE எஞ்சின் கொண்ட Punch காருடன் ஒப்பிடும்போது Punch Electric Carல் அதிக அம்சங்களை Tata வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் LED HeadLight, All-Wheel Disc Break, TouchScreen Infotainment System, Spoke Stearing, மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tata Punch EV, Tata Punch EV price, Tata Punch EV launch date, Tata Punch EV features, Tata Punch EV range