தினசரி பயன்பாட்டிற்கு குறைந்த விலையில் சிறந்த 5 எலெக்ட்ரிக் SUV கார்கள்
300 கிமீக்கும் அதிக தூரம் பயணிக்கக் கூடிய, குறைந்த விலையிலான சிறந்த 5 எலெக்ட்ரிக் SUV கார்கள் குறித்து பார்க்கலாம்.
இவை முன்னணி எலெக்ட்ரிக் SUV கார்கள், அதிக பயண தூரம், சிறந்த மின்சார திறன், மற்றும் ஓரளவுக்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன.
1- Tata Punch EV
2024-இல் அதிகம் விற்கப்பட்ட Tata Punch, அதன் மின்சார மாடல் Punch EV மூலம் கூடுதல் வெற்றியைப் பெற்றது.
மின்சார மாடல்கள்: 25 kWh (315 கிமீ) மற்றும் 35 kWh (421 கிமீ)
விலை: ரூ.9.99 - ரூ.14.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
2- Tata Nexon EV
மின்சாரம், பெட்ரோல், டீசல், CNG என அனைத்து வகையிலும் கிடைக்கக்கூடிய ஒரே SUV Tata Nexon EV.
மின்சார மாடல்கள்: 30 kWh (325 கிமீ) மற்றும் 45 kWh (489 கிமீ)
விலை: ரூ.12.49 - ரூ.16.49 லட்சம்
3- Mahindra XUV400
Mahindra XUV400 மஹிந்திராவின் மிகவும் மலிவான மின்சார SUV, மிகுந்த மதிப்புள்ள ஒரு தேர்வாகத் திகழ்கிறது.
மின்சார மாடல்கள்: 34.5 kWh (375 கிமீ) மற்றும் 39.4 kWh (456 கிமீ)
விலை: ரூ.15.49 - ரூ.17.69 லட்சம்
4- Tata Curvv EV
தனித்துவமான கூப்பே ஸ்டைல் SUV வடிவமைப்புடன் அதிக திறன் மற்றும் அதிக தூரம் பயணிக்கக்கூடிய எலக்ட்ரிக் சார் இதுவாகும்.
மின்சார மாடல்கள்: 45 kWh (502 கிமீ) மற்றும் 55 kWh (585 கிமீ)
விலை: ரூ.17.49 - ரூ.21.99 லட்சம்
5- Hyundai Creta Electric
சமீபத்தில் அறிமுகமான Hyundai Creta EV ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மின்சார மாடல்கள்: 42 kWh (390 கிமீ) மற்றும் 51.4 kWh (473 கிமீ)
விலை: ரூ.17.99 - ரூ.24.38 லட்சம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hyundai Creta Electric, Hyundai Creta EV, Tata Curvv EV, Mahindra XUV400, Tata Nexon EV, Tata Punch EV