குறைந்த விலையில் அறிமுகமாகிறது 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி (Ather Energy), விரைவில் 450எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும், தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கேற்ற வாகனங்களை தயாரிக்கும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் ஏத்தர் எனர்ஜி, விரைவில் 450எஸ்(450S) என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.
#TeasersWithoutContext no. 6
— Ather Energy (@atherenergy) August 1, 2023
A ton of new stuff under the hood(ie). Care to guess?#Ather #Ather450S #Ather450X #ElectricScooter #EV #Launch #ComingSoon pic.twitter.com/ta1Udwbbet
மிக குறைவான விலையில் தயாராகும் இந்த ஸ்கூட்டர் வருகிற 11ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் குறித்த ஸ்கூட்டரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதால் அப்பகுதி மட்டும் துணியால் மூடப்பட்டுள்ளது.
இதன் திரையை டச் மூலமாக கட்டுப்படுத்த முடியாது என்றும், நாவிகேஷன் வழிகாட்டி வழங்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
இதன் பற்றரியை முழுமையாக சார்ஜ் செய்து அதிகபட்சமாக 115 கி.மீ வரை பயணிக்கலாம், 90kmph வேகத்தை பெறலாம் எனவும் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |