NO Driving license.. ரூ.30 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
FGPS எலக்ட்ரிக் இ-டால்பின் (FGPS E Dolpin Electric Scooter) என்ற ஸ்கூட்டரின் விலை ரூ.30 ஆயிரத்திற்கும் கீழ் விற்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
தற்போதைய காலத்தில், இருச்சக்கர வாகனம் வாங்க நினைப்பவர்கள் முதலில் பெட்ரோல் விலையை தான் பார்ப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலருக்கும் உண்டு.
சந்தையில் அதற்காகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. அதற்கு நாம் சார்ஜ் செய்தாலே போதும். ஆனாலும், இதிலும் சிலர் இதனுடைய விலை, பேட்டரி சார்ஜிங்க் ஆகிய காரணங்களால் இதனை தவிர்க்கின்றனர்.
இதனிடையில், நடுத்தர குடும்பங்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ஏற்கக்கூடியதாக இருக்கும். அதற்கான பதிவு தான் இது.
FGPS எலக்ட்ரிக் இ-டால்பின்
FGPS எலக்ட்ரிக் இ-டால்பின் என்ற ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ.30 ஆயிரம். இதனுடைய விலையானது ஒவ்வொரு மாநிலங்களை பொருத்து மாறுபடும் என்றும் கூறப்படுகிறது.
* இதை நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் செல்லலாம்.
* இதனுடைய வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்
* இதிலுள்ள லித்தியம் அயர்ன் பேட்டரியை சார்ஜ் செய்ய 5-6 மணி நேரம் ஆகும்.
* இந்த ஸ்கூட்டருக்கு பதிவு எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving license) தேவையில்லை
* இந்தியா மார்ட் அல்லது அமேசான் தளங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |