யாரும் இல்லாத வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.1 லட்சமாம்? கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த மின்வாரியம்
ஆளில்லாத வீட்டிற்கு மின்கட்டணம் ரூ.1 லட்சம் வந்ததாக கங்கனா ரனாவத் கூறிய குற்றச்சாட்டிற்கு மின்வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
மின்வாரியம் பதிலடி
மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நடிகையும், எம்பியுமான கங்கனா ரனாவத், "இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மணாலியில் உள்ள ஆளில்லாத எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தாங்கவே இல்லை" என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் மின்கட்டணம் செலுத்தாமல் தாமதப்படுத்துகிறார்.
அவருக்கு வந்த மின்கட்டணம் ஒரு மாதத்திற்கு மட்டுமே. அவர் தவறான தகவல்களை கூறுகிறார். அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW. இது சாதாரண வீட்டை விட 1,500 சதவீதம் அதிகம்.
அவரது நிலுவைத் தொகை ரூ.32,287 ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இதனை தவிர மற்ற கட்டணங்கள் உட்பட ரூ.90,384 ஆகும். இதனை வைத்து தான் அவர் பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |