ஜேர்மனியில் வரும் மாதங்களில் எக்கச்சக்கமாக உயர இருக்கும் சேவை ஒன்றின் கட்டணம்
ஜேர்மனியில் மின்கட்டணம் கடுமையாக உயர இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Verivox என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், மின்கட்டணம் சராசரியாக 25 சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழும் வீட்டில் 4,000 கிலோவாட் மணி மின்சாரம் பயன்படுத்தப்படுமானால், ஆண்டொன்றிற்கு அந்த குடும்பத்துக்கான மின்கட்டணம் 311 யூரோக்கள் அதிகரிக்கும்.
மொத்த கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், வரும் மாதங்களில் மின்கட்டணம் எக்கச்சக்கமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம் என Verivox ஆற்றல் நிபுணரான Thorsten Storck என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் குடும்பங்களின் சுமை அதிகரிக்கும் என்கிறார் அவர்.
Photo: picture alliance/dpa | Sina Schuldt
வரும் ஆண்டில், சராசரியாக ஒரு கிலோவாட் மணி மின்சாரத்துக்கான கட்டணம் 45 சென்ட்கள் அல்லது அதைவிட அதிகமாகலாம் என்கிறார் Storck. தற்போது அது 42 சென்ட்களாக உள்ளது.
இந்த மின்கட்டண உயர்வுக்கான காரணம் உக்ரைன் போர் மட்டுமல்ல, நீர்நிலைகளில் தன்ணீரின் அளவு குறைந்து வருவதும்தான்.
Rhine நதியில் நீர்மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், கப்பல்களில் கொண்டு வரப்படும் எண்ணெய் மற்றும் நிலக்கரியின் அளவைக் குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.