உலக அளவில் யானைகள் இறப்பில் இலங்கை முதலிடம்: இன்னும் 10 ஆண்டுகள் தான்..!நிபுணர்கள் எச்சரிக்கை
உலக அளவில் யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் இறப்பு அதிகரிப்பு
வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், உலக அளவில் இலங்கை யானைகளின் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 288 யானைகளும், 2020 முதல் 2024ம் ஆண்டு வரையில் சுமார் 2000 யானைகளும் உயிரிழந்துள்ளன.
யானைகள் இறப்புக்கான முக்கிய காரணங்கள்
தந்தங்களுக்காக வேட்டையாடுதல், அதிகரிக்கும் மனித-யானை மோதல்கள், விஷம் மற்றும் மின்சார வேலிகள் ஆகியவை யானைகள் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
யானைகளை பாதுகாப்பதற்காக கடந்த காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தோல்வியடைந்ததும், மோசமாக செயல்படுத்தப்பட்ட யானைகள் இடமாற்ற திட்டமும் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
இவற்றில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், யானைகளின் இறப்பு எண்ணிக்கை இப்படியே தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை மிகுந்த வீழ்ச்சியை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |