வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை: பின்னணி
இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை
சனிக்கிழமையன்று, மேற்கு வங்கத்திலுள்ள சந்தன் நகர் என்னுமிடத்தில் தெருவில் வலம் வந்த யானை ஒன்றிற்கு விஜய் ஹோல்க்கர் (49) என்னும் ஆட்டோ ரிக்ஷா சாரதி வெல்லம் கொடுத்துள்ளார்.

அப்போது, யானையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, யானைப்பாகனான உமேஷ் கோஸ்வாமி, யானையின் தலை அருகே குச்சியால் தட்டியுள்ளார்.
கோபமடைந்த யானை தனக்கு வெல்லம் கொடுத்த விஜயை தூக்கி வீசி காலால் மிதித்துள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில், யானைப்பாகனான உமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது, விலங்கு ஒன்று தொடர்பில் அலட்சியம் காரணமாக உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது முதலான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |