சுவிஸ் மருத்துவமனைகளில் திடீரென அதிக அளவில் அனுமதிக்கப்படும் குறிப்பிட்ட வயதினர்: பின்னணி...
*சுவிஸ் நாட்டில் முதியோர் மீது வெப்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
*குறிப்பாக இதய பிரச்சினை உள்ள முதியவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
சுவிஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துவருவதாக ஜெனீவா பல்கலை மருத்துவமனை கவலை தெரிவித்துள்ளது.
அதற்குக் காரணம் அதிகரித்துவரும் வெப்பம்!
இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், ஏற்கனவே இதயப் பிரச்சினை கொண்டவர்களின் நிலைமையை, அதிகரிக்கும் வெப்பம் இன்னமும் மோசமாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
image - Pixabay
இருந்தாலும் வெப்பத்தால் ஏற்படும் நேரடி பாதிப்பு பெரும்பாலும் நீரிழப்பு (dehydration). அது போக, முதியவர்களுக்கு அதிக வெப்பம் காரணமாக பசியின்மை ஏற்படுவதால், அவர்கள் தேவையான அளவு சாப்பிடவும் மாட்டேன்கிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் பலர், கீழே விழுந்ததாலோ அல்லது குழப்ப நிலையிலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஜெனீவா பல்கலை மருத்துவமனை.