பிரித்தானியா மகாராணி உடல்நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்
பிரித்தானியா மகாராணி உடல்நிலை குறித்து கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரச குடும்பம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த மாதம் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து பிரித்தானியா மகாராணியின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, ஞாயிறு நினைவு கூட்டத்திலும் பிரித்தானியா மகாராணி பங்கேற்காததால், அவரது உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்தது.
இந்நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அரச குடும்பம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
The Queen today received General Sir Nick Carter for an Audience at Windsor Castle upon the relinquishment of his appointment as Chief of the Defence Staff. pic.twitter.com/Pvttc0hv7w
— The Royal Family (@RoyalFamily) November 17, 2021
அதில், வின்ட்சர் கோட்டையில் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவரும் பிரித்தானியாவின் ஆயுதப்படைகளின் தலைவருமான Nick Carter உடன் பிரித்தானியா மகாராணி உரையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நவம்பர் இறுதியில் Nick Carter பதவியில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.