உடலிற்கு வலுசேர்க்கும் எள்ளு பொடி சாதம்.., எப்படி செய்வது?
மருத்துவ குணங்கள் நிறைந்த எள்ளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளன.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரியமான எள்ளு பொடி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- ¼ ஸ்பூன்
- மிளகு- ¼ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- வேர்க்கடலை- 1 ஸ்பூன்
- எள்ளு- 3 ஸ்பூன்
- கொப்பரை தேங்காய்- 5 துண்டு
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- முந்திரி- 5
- சாதம்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கடலை பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, எள்ளு சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.
பின் இதில் கொப்பரை தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
இதற்கடுத்து இதில் சாதம், அரைத்த எள்ளு பொடி, உப்பு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான எள்ளு பொடி சாதம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |