சிக்ஸர், பவுண்டரியுடன் 86 ரன் விளாசிய கேப்டன்! 6 ரன்னில் த்ரில் வெற்றி
மகளிர் BBL போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹோபார்ட் ஹரிகேன் அணியை வீழ்த்தியது.
எல்லிஸ் பெர்ரி அதிரடி
Bellerive Oval மைதானத்தில் நடந்த இப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் (Sydney Sixers) அணி முதலில் துடுப்பாடியது.
அலிஸ்ஸா ஹீலி (4), சாரா பிரிஸ் (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) அதிரடியில் மிரட்டினார்.
"Her magnificent form continues!"
— Weber Women's Big Bash League (@WBBL) November 6, 2024
That's a 31st WBBL fifty for Ellyse Perry - and a third already in #WBBL10 👏 pic.twitter.com/LQAfaIOY8l
கார்ட்னர் தனது 21 (16) ஓட்டங்களும், ஆர்மிடேகே 30 (25) ஓட்டங்களும் தங்கள் பங்குக்கு எடுத்து வெளியேறினர்.
எனினும் அரைசதம் விளாசிய பெர்ரி 62 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. ட்ரையான் மற்றும் கேரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
🚨 Shot of the day 🚨
— Weber Women's Big Bash League (@WBBL) November 6, 2024
This is simply stunning from @EllysePerry. #WBBL10 pic.twitter.com/zbidSNUMIl
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
அடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் டேனியில்லே வைட் 30 (26) ஓட்டங்களும், வில்லானி 26 (17) ஓட்டங்களும் எடுத்தனர். ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
லாரென் ஸ்மித் மற்றும் வெற்றிக்கு போராட, ஹோபார்ட் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்களே எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
Player of match விருதை எல்லிஸ் பெர்ரி பெற்றார்.
Ellyse Perry so far in #WBBL10:
— Weber Women's Big Bash League (@WBBL) November 6, 2024
81
54
31*
86
Average: 84
Strike rate: 164.70 pic.twitter.com/I0EhQXQHpe
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |