எக்ஸ் பயனாளர்களுக்கு புதிய சந்தா முறைகளை அறிவித்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எக்ஸ் வலைத்தளம்
ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஒருபடி மேலே சென்று எக்ஸ் என ட்விட்டரின் பெயரை மாற்றினார் மஸ்க்.
Sirijit Jongcharoenkulchai / EyeEm / Getty Images
இந்த நிலையில் புதிய சந்தா முறைகளை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். இதில் Premium + மற்றும் Basic ஆகியவை அடங்கும். Premium +யில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.
மஸ்கின் இந்த அறிவிப்பின் மூலம் பயனர்கள் தற்போது 3 விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய எக்ஸ் basic சந்தாவின் விலை மாதம் ரூ.243 (வலைதள பதிப்பு) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அத்துடன் பயனர்கள் தங்கள் பதிவுகளை edit செய்வது, மாற்றிக் கொள்வது, SMS, Customization அம்சங்கள் இதில் வழங்கப்படுகிறது. மேலும், Creator அம்சங்கள் மற்றும் Tick mark உள்ளிட்டவை வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
Reuters
அம்சங்கள்
Premium சந்தாவை பொறுத்தவரை அதன் விலை மாதம் ரூ.650 (வலைதள பதிப்பு) ஆகும். இதில் அனைத்து விதமான பிரீமியம் மற்றும் Creator அம்சங்கள், குறைந்த விளம்பரங்கள் வழங்கப்படும்.
விளம்பரங்கள் தேவை இல்லை என்றால், மாதம் ரூ.1300 (வலைதள பதிப்பு) செலுத்தி Premium + சந்தாவை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கிடையில், புதுவித சந்தா முறைகளில் Premium + மற்றும் Basic ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |