ஆண்டுக்கு 1 டிரில்லியன் டொலர் சம்பளம் வாங்கவிருக்கும் எலோன் மஸ்க்: சில நிபந்தனைகள்
டெஸ்லா நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகவும் தீவிரமான சில இலக்குகளை அடைந்தால், எலோன் மஸ்க் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டொலர் சம்பளம் வாங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு 20 மில்லியன்
ரோபாட்டிக்ஸ் மற்றும் AI தொழில்நுட்பங்களை பெரிதும் நம்பியிருக்கும் டெஸ்லா நிறுவனம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த ஒரு ஒழுங்குமுறை ஆவணத்தில் எலோன் மஸ்க்கின் சம்பளம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லா கார்களின் உற்பத்தி, நிறுவனத்தின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு டெஸ்லா பங்குகளை சம்பளமாக அளிக்க டெஸ்லா நிர்வாகம் முன்வந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் 2 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பை எட்ட வேண்டும், ஆண்டுக்கு 20 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட திட்டங்களையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி
2024ல் டெஸ்லா நிறுவனம் வெறும் 2 மில்லியன் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 1 டிரில்லியன் டொலர் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ஏழரை ஆண்டுகள் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். 10 ஆண்டுகள் பணியாற்றினால், 1 டிரில்லியன் டொலர் சம்பளம் என்பது சாத்தியமாகலாம்.
டெஸ்லா விற்பனை
தற்போதைய நிலையில், டெஸ்லா நிர்வாகம் முன்வைக்கும் திட்டங்களுக்கு அதிக வாக்களிக்கும் அதிகாரமும் மஸ்க் பெறலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெலாவேர் நீதிபதியால் நிராகரிக்கப்பட்ட எலோன் மஸ்க்கின் ஆண்டு சம்பளமான 44.9 பில்லியன் டொலர் சம்பளத்திட்டத்திற்கு முதலீட்டாளர்கள் குழு வாக்களித்து மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்புடனான மஸ்க்கின் நெருக்கம் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதம் வரையில் சரிந்தது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரி அரசியல் கட்சிக்கு அளித்த ஆதரவு காரணமாக ஐரோப்பாவில் டெஸ்லா வாகனங்களின் விற்பனை தரைமட்டமானது.
மிகச் சமீபத்திய காலாண்டில், டெஸ்லாவின் காலாண்டு லாபம் 1.39 பில்லியன் டொலரில் இருந்து 409 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் மஸ்க்கின் அளப்பரிய பங்களிப்பை ஆதரிக்கும் வகையில் 29 பில்லியன் டொலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை வழங்க இருப்பதாக கடந்த மாதம் அறிவித்துள்ளனர்.
மஸ்க்கின் 2018 ஊதிய தொகுப்பை இரண்டாவது முறையாக நீதிபதி ஒருவர் ரத்து செய்த எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்த 29 பில்லியன் டொலர் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |