xAI நிறுவனத்தின் பிரத்யேக For You AI: எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI தங்கள் பயனர்களுக்கான பிரத்யேகமான புதிய பக்கங்களை உருவாக்கி வருகிறது.
எலான் மஸ்க்கின் For You AI
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-யில் பயனர்களுக்கான பிரத்யேகமான For You AI என்ற பக்கங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த For You AI பக்கங்களில் பயனர்கள் வழக்கமான பொதுவான தகவல்களுக்கு பதிலாக பயனர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த தேவையான தகவல்களை மட்டும் பெறும் வசதி கிடைக்கவுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பயனர்கள் தங்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை மட்டும் பெறுவதாகும். எலான் மஸ்க்கின் இந்த திட்டம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த For You AI பக்கத்தில் கவனச் சிதறல்கள் தவிர்க்க அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் இந்த For You AI திட்டம் குறித்து விளக்கி இருந்தாலும், இதன் வெளியீட்டு திகதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |