ட்ரம்பின் வெற்றி... 5 நாட்களில் உலகின் மாபெரும் கோடீஸ்வரராக மாறிய எலோன் மஸ்க்
உலகில் 300 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபராக டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் மாறியுள்ளார்.
வெறும் 5 நாட்களில்
டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 304 பில்லியன் அமெரிக்க டொலர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலகில் இதுவரை எவரும் எட்டாத, 300 பில்லியன் டொலர் என்ற இலக்கை எலோன் மஸ்க் அடைந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவான நிலையில், வெறும் 5 நாட்களில் டெஸ்லா பங்குகள் விலை சுமார் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் டெஸ்லா பங்குகள் விலை 8.19 சதவிகிதம் அதிகரிக்க, எலோன் மஸ்க் தமது சொத்து மதிப்பில் 14 பில்லியன் டொலர் தொகையை சேர்த்துக்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் எலோன் மஸ்க் உலகின் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் 250 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முன்னணியில் இருந்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை
ஆனால் டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவானதும் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பும் உயரத் தொடங்கியது. இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்பை வெளிப்படையாக ஆதரித்த எலோன் மஸ்க், போட்டி மிகுந்த மாகாணங்களில் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பரப்புரைகளும் மேற்கொண்டுள்ளார்.
ட்ரம்பின் வெற்றியை அடுத்து முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே, டெஸ்லா பங்குகள் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. டெஸ்லா மட்டுமின்றி எலோன் மஸ்கின் பல நிறுவனங்களும் சமீப நாட்களில் பெரும் ஆதாயம் பார்த்துள்ளது.
தற்போதைய நிலையில், எலோன் மஸ்க் முதலிடத்தில் 304 பில்லியன் டொலர்களுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் 230.7 பில்லியன் டொலர்களுடன் Larry Ellison உள்ளார். 224.5 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அடுத்த வரிசையில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |