749 பில்லியன் டொலர் சொத்து: உலக பணக்காரர்களில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்
சுமார் 749 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் புதிய சாதனை படைத்துள்ளார்.
சொத்து மதிப்பில் புதிய உச்சம்
உலகின் முதல் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான(CEO) எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அவரது சொத்து மதிப்பு தற்போது சுமார் 749 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் சுமார் 700 பில்லியன் சொத்து மதிப்பை தொட்ட வரலாற்றில் முதல் பணக்காரர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
திருப்புமுனையாக அமைந்த நீதிமன்ற தீர்ப்பு
2024ம் ஆண்டு கீழ் நீதிமன்றம் எலான் மஸ்க்கின் 2018ம் ஆண்டு ஊதிய திட்டத்தை கற்பனை செய்ய முடியாத ஒன்று என கூறி அதை ரத்து செய்து இருந்தார்.
ஆனால் தற்போது கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை டெலாவோர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் எலான் மஸ்க்கின் 2018ம் ஆண்டு ஊதிய திட்டத்தை கீழ் நீதிமன்றம் ரத்து செய்தது முறையற்றது என்றும் நியாயமற்றது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

திரும்ப கிடைத்த பங்குகள்
டெலாவோர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், 2018ம் ஆண்டு டெஸ்லா தனது இலக்குகளை அடைந்ததற்காக கிடைக்க வேண்டிய பங்கு விருப்பங்கள் மீண்டும் எலான் மஸ்க்கிற்கு கிடைத்துள்ளது.
அப்போது பங்கு விருப்பங்களின் மதிப்பு சுமார் 56 பில்லியன் டொலராக இருந்த நிலையில், அதன் தற்போது மதிப்பு சுமார் 139 பில்லியன் டொலராக உயர்ந்து எலான் மஸ்க் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்த அடிப்படையாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |