பரபரப்பான சூழலில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்! பதிவிட்ட முதல் ட்வீட்
ட்விட்டரை நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு வாங்கியிருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை ஒரு பங்குக்கு 54.20 டொலருக்கு வாங்கும் எலோன் மஸ்க்கின் டீலை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. முன்னதாக அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் - எலான் மஸ்க் இடையே ஆலோசனை நடந்தது. நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு மொத்தமாக 44 பில்லியன் டொலர்களை கொடுத்து ட்விட்டரை வாங்குவதாக மஸ்க் கூறியதைத் தொடர்ந்து இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் தனது முதல் ட்விட்டை பதிவிட்டுள்ளார். அதில், 'என்னை மோசமாக விமர்சனம் செய்பவர்கள் கூட ட்விட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அது தான் பேச்சு சுதந்திரம்' என குறிப்பிட்டுள்ளார்.
I hope that even my worst critics remain on Twitter, because that is what free speech means
— Elon Musk (@elonmusk) April 25, 2022
மேலும் தனது மற்றோரு பதிவில், 'சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத விடயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் நகர சதுக்கமாகும், கூறியது திரு. மஸ்க்.
புதிய அம்சங்களை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க open source algorithms-ஐ உருவாக்கி, spam bots-ஐ தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்விட்டரை சிறப்பாக உருவாக்க விரும்புகிறேன்.
ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது - நிறுவனத்துடனும், பயனாளர் சமூகத்துடனும் இணைந்து அதனை வெளியே கொண்டுவர நான் எதிர்நோக்கியுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021