இனி ட்விட்டரில் குருவிக்கு பதிலாக நாய் சின்னம்
கடந்த வருடம் 2022 ஒக்டோபர் மாதம் $44 பில்லியன் ஒப்பந்தத்தில் ட்விட்டரை விலை கொடுத்து வாங்கினார் எலோன் மஸ்க்.
அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகி வருகின்றன.
இவர் டோஜ் மீம்ஸின் நன்கு அறியப்பட்ட சூப்பர் ஃபேன் ஆவார்.
மாற்றப்பட்ட நாய் லோகோ!
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023
அத்தோடு வழக்கமான நீல நிறக்குருவிக்கு பதிலாக நாய் சின்னத்திற்கு மாற்றிவிட்டார்.
மேலும் அவர் ட்விட்டரிலும், கடந்த ஆண்டு "சனிக்கிழமை இரவு நேரலை" நிகழ்ச்சியை நடத்தியபோதும் டோஜ்கோய்னை விளம்பரப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் வலைத்தள லோகோவில் திங்கட்கிழமை மாற்றப்பட்ட பிறகு, டோஜ்கோய்னின் மதிப்பு 20% க்கும் அதிகமாக உயர்ந்தது.
ஜப்பானின் குறித்த முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் சின்னத்தை வைக்கப்பட்டுள்ளது.
டோஜ்கோய்ன் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.