கமலா ஹாரிஸ் உண்மையில் ஒரு..,எலான் மஸ்க் பதிவு
கமலா ஹாரிஸ் சமத்துவத்தை விரும்புபவர் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் முன்மொழியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பரப்புரைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது பரப்புரைகளில் கம்யூனிச வார்த்தைகளை குறிப்பிடுகிறார். அதிலும் குறிப்பாக கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை கமலா ஹாரிஸ் பேசுகிறார்.
கம்யூனிஸ்ட்
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தனது எக்ஸ் பதிவில் கமலா ஹாரிஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "கமலா ஒரு உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட். அவர் சமமான வாய்ப்பை மட்டுமல்ல, சமமான விளைவுகளையும் விரும்புகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மேகன் மெர்க்கல் தனது ஆதரவினை கமலா ஹாரிஸிற்கு தெரிவிப்பதாக தகவல் வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |