உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் அதிரடி முடிவு! எழுந்துள்ள கடும் சர்ச்சை
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் அதிரடி முடிவால் டெஸ்லா ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதன்படி டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மஸ்க்கின் இந்த விமர்சனம் கடும் விமர்னங்களை கிளப்பியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிடம் இருந்து, அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.
அதில் டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்றும், நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டீர்கள் என்று கருதுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
CNN
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் அவுஸ்திரேலிய திட்ட மேலாண்மை மென்பொருள் தயாரிப்பாளரான அட்லாசியன் கம்பெனியில் இணை நிறுவனரான, ஸ்காட் ஃபார்குஹார், எலான் மஸ்க்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உத்தரவு "1950 களில் இருந்ததைப் போன்றது" என்று கேலி செய்துள்ளார்.
எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்கிற கொள்கை அமெரிக்காவை சேர்ந்த கம்பெனிகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
AP