இளம் வயதில் இரவும் பகலும் இரண்டு வேலை செய்த எலான் மஸ்க்! வைரலாகும் அரிய புகைப்படம்
ட்விட்டர் பக்கத்தில் ஒரு பயனர் 90-களில் எடுக்கப்பட்ட எலான் மஸ்க்கின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரைப் பற்றிய அறிய தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறிமாறி முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், 90-களில் எப்படி இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்த அரிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏறப்டுத்தியுள்ளது.
Pranay Pathole என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மிஸ்கின் ஒரு பிளாக் & வைட் புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதில், எலான் மஸ்க் 90-களில் Palo Alto-ல் 'Rocket Science' எனும் வீடியோகேம் நிறுவனத்தில் C++ ப்ரோக்ராமராக வேலை பார்த்ததாக பதிவிட்டிருந்தார்.
இந்த டீவீட்டுக்கு பதிலளித்த எலான் மஸ்க், அது தனது இரவு வேலை என்றும் பகலில் ruthenium-tantalum ultracapacitors குறித்து Pinnacle Research-ல் வேலை பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவும், அரிய புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.
In the early 90s, @elonmusk worked at a videogame company in Palo Alto, where he wrote a multitasker for PC in C++ which could basically read video from a CD while running a game at the same time. The name of that videogame company was Rocket Science. Fate loves irony. pic.twitter.com/qAtmgow8MS
— Pranay Pathole (@PPathole) April 14, 2021
That was my night job. Day job was working on ruthenium-tantalum ultracapacitors at Pinnacle Research.
— Elon Musk (@elonmusk) April 14, 2021