கணிப்பு உண்மையானது... எலான் மஸ்க் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக, அவருக்கு ஆதரவாக பணத்தை வாரி இறைத்தது பலரும் அறிந்ததே.
ஆகவே, ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் அமைச்சரவையில் எலான் மஸ்குக்கு முக்கிய இடமளிக்கப்படலாம் என்னும் ரீதியில் செய்திகள் பரவலாக வெளியாகிவந்தன.
குறுக்கே புகுந்த எலான் மஸ்க்
சம்பத்தில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ட்ரம்பை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
அப்போது, குறுக்கே புகுந்து எலான் மஸ்க் ஜெலன்ஸ்கியிடம் பேசியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக, இப்படி ஒரு முக்கியமான விடயத்திலேயே எலான் மஸ்க் தலையிடும்போது, ட்ரம்ப் அரசிலும் அவர் முக்கியமான இடம் வகிக்கக்கூடும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகின.
கணிப்பு உண்மையானது...
இந்நிலையில், ட்ரம்ப் அரசில் எலான் மஸ்க் முக்கியமான இடம் வகிக்கக்கூடும் என ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியுள்ளன.
ஆம், ட்ரம்ப் புதிதாக உருவாக்கவிருக்கும் Department of Government Efficiency என்னும் துறையில், எலான் மஸ்குக்கும், விவேக் ராமசாமிக்கும் முக்கிய பங்கு அளிக்கப்பட உள்ளது.
எலான் மஸ்குக்கு, secretary of cost cutting என்னும் பொறுப்பு வழங்கப்படலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து நேற்று ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கும், பெடரல் நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும் எனது நிர்வாகத்திற்கு வழி வகுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |