தவறாக புரிந்து கொண்டேன்….ட்விட்டர் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவரை எலான் மஸ்க் கேலி செய்து சர்ச்சையாகி இருந்த நிலையில், அவரிடம் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஊழியர்கள் பணி நீக்கம்
உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியை பணியில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ட்விட்டர் நிறுவனமும் தங்களின் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு உலக அளவில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியே முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
AP
இதற்கிடையில் பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி பொறியாளர், மேலாளர்கள், கணினி வல்லுநர்கள் என பலரும் எலான் மஸ்க்கையும் அவரது நிறுவனத்தையும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் தான் பணியில் இருக்கிறேனா? இல்லையா என்பதை தெளிப்படுத்துமாறு எலான் மஸ்க்-கை இணைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், அவரது மாற்றுத்திறனை சுட்டிக்காட்டி, இதனால் தான் இவர் வேலை செய்யவில்லை என தெரிவித்து இருந்தார்.
I'm not going to lie, this is the most entertaining exit interview I've ever witnessed pic.twitter.com/6OfjuGNIiC
— Alex Cohen (@anothercohen) March 7, 2023
இது சர்ச்சையாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த மாற்றுத்திறனாளியிடம் எலான் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில் ஹல்லியின் நிலையை தான் தவறாக புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் எனவும், அவர் ட்விட்டரில் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.