அனைத்து அமெரிக்க அரசு ஊழியர்களுக்கும் எலோன் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சல் மிரட்டல்
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிய துறை ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எலோன் மஸ்க் விசித்திரமான ஒரு மின்னஞ்சலை அனைத்து அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கும் அனுப்பி கதிகலங்க வைத்துள்ளார்.
ராஜினாமாவாகக் கருதப்படும்
குறித்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்க மறுக்கும் அனைத்தும் அரசாங்க ஊழியர்களும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ட்ரம்பின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அனைத்து பெடரல் ஊழியர்களும் கடந்த வாரம் என்ன செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக் கோரி விரைவில் ஒரு மின்னஞ்சலைப் பெறுவார்கள்.
பதிலளிக்கத் தவறினால் அது ராஜினாமாவாகக் கருதப்படும் என தெரிவித்துள்ளார். மஸ்கின் இந்த பதிவை பலர் பாராட்டியுள்ள நிலையில் சிலர் இதுவெறும் பகடி என்றும் கேலி செய்துள்ளனர்.
Consistent with President @realDonaldTrump’s instructions, all federal employees will shortly receive an email requesting to understand what they got done last week.
— Elon Musk (@elonmusk) February 22, 2025
Failure to respond will be taken as a resignation.
உக்கிரமாக செயல்பட வேண்டும்
ஒருவர் குறிப்பிடுகையில், அரசு ஊழியரான தாம் கடந்த வாரம் மூன்று கழிவறைகளை திறந்து பார்த்தேன், என்னை வேலையில் இருந்து நீக்காதீர்கள் என பதிலளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததன் பின்னர் DOGE என்ற துறைக்கு எலோன் மஸ்க் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவையற்ற செலவுகளை குறைத்து அரசாங்கத்திற்கு உதவும் பொறுப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் பல துறைகளில் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர். மட்டுமின்றி, எலோன் மஸ்க் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், இன்னும் அவர் உக்கிரமாக செயல்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவரை ஊக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |