பிரித்தானிய பிரதமரை பதவியிலிருந்து இறக்க சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற தன் பணத்தை வாரி இறைத்தாலும் இறைத்தார், எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர் என்ற நிலையிலிருந்து உலக அரசியல்வாதி என்னும் நிலையை எட்டிவிட்டார்!
ஆம், உலக நாடுகளின் பிரச்சினைகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக தீர்ப்பது என கங்கணங்கட்டிக்கொண்டுள்ளார் போலிருக்கிறது எலான் மஸ்க்.
பிரித்தானிய பிரதமரை பதவியிலிருந்து இறக்க ஆலோசனை
பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்துவரும் எலான் மஸ்க், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்க, தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டார்மரை, அடுத்த பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு முன் பதவியிலிருந்து இறக்குவதற்காக, தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகளுடன் எலான் மஸ்க் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதனால் கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்க எலான் மஸ்க் விரும்புகிறார், ஸ்டார்மரிடம் அவருக்கு என்ன பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை.
ஆனாலும், பிரித்தானியாவில் சிறுமிகளை ஏமாற்றி சீரழிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களான கும்பல்கள் குறித்த செய்திகள் பரவிவருகின்றன, அவை நாடாளுமன்றம் வரை எதிரொலித்துவருகின்றன.
அந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அவர் சார்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்திவருகிறார் எலான் மஸ்க்.
இப்படி பிரித்தானிய அரசியலில் எலான் மஸ்க் தலையிட்டுள்ள நிலையில்தான், தற்போது ஸ்டார்மரை பிரதமர் பதவியிலிருந்து இறக்க எலான் மஸ்கும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டுவருவதாக Financial Times பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |