20 பேர் பயணிக்கூடிய தானியங்கி ரோபோ டாக்சி! எலான் மஸ்க்கின் அதிரடி அறிமுகம்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தானியங்கி ரோபோ டாக்சியை அறிமுகம் செய்துள்ளார்.
உலக பணக்காரரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் சமீபத்தில் மனித ரோபோவை அறிமுகம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து வியாழனன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில் எலான் மஸ்க் கலந்துகொண்டார். அங்கு இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோ டாக்சியைக் காட்சிப்படுத்தினார்.
இந்த வாகனத்திற்கு Cyber Cab என பெயரிடப்பட்டுள்ளது. டெஸ்லாவின் இலக்கு குறைந்த விலையுள்ள இவ்வாகனம், வெகுஜன சந்தை கார் தயாரிப்பில் இருந்து ரோபாட்டிக்ஸ் உற்பத்திக்கு மாறியிருப்பதால் மஸ்க் Robo Vanஐயும் அதில் சேர்த்துள்ளார்.
இந்த Robo Van ஒரு தானியங்கி வாகனம் ஆகும். இது 20 பேர் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதனையும் மஸ்க் நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.
ஒரு செயலி மூலம் பயணிகள் பயன்படுத்தும் ஓட்டுநர் இல்லா டெஸ்லா டாக்சிகளை இயங்குவதே மஸ்கின் திட்டமாகும்.
ஒவ்வொரு தனிப்பட்ட டெஸ்லா உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை ரோபோ டாக்சிஸ் என பட்டியலிடுவதன் மூலம் அதை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமாம்.
எலான் மஸ்க் இதுகுறித்து கூறுகையில், "இது 2026யில் உற்பத்தி செய்யப்படும். இது 30,000 டொலருக்கும் குறைவான விலையில் கிடைக்கும். காலப்போக்கில் ஒரு மைலுக்கு 20 சென்ட் வரை செலவாகும். சார்ஜிங் கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் பிளக்குகளின் தேவை இருக்காது. கார்கள் AI மற்றும் கமெராக்களை நம்பி இருக்கும். மேலும் ரோபோடாக்சி போட்டியாளர்கள் பயன்படுத்தும் பிற வன்பொருட்கள் தேவைப்படாது" என தெரிவித்துள்ளார்.
ஆனால், தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை நிலைப்பாட்டில் இது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று இதுகுறித்து முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |