Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எலான் மஸ்க் “X Chat” என்ற புதிய செய்தி பரிமாற்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் X Chat
உலகின் முன்னணி செய்தி பரிமாற்று செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் நிலைத்து வருகிறது.

இந்நிலையில் Whatsapp செயலியுடன் போட்டியிடும் வகையில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய xAi நிறுவனத்தின் மூலம் X தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட X Chat புதிய செய்திப் பரிமாற்ற செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு X தளத்தினை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், X Chat செயலியானது எல்லாவற்றுக்குமான செயலியாக(Everything App) இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்ஆப் மற்றும் அரட்டை போன்ற செய்தி பரிமாற்ற தளங்களுக்கு போட்டியாக தனியுரிமை மையப்படுத்தப்பட்ட X Chat உருவாக்கப்பட்டுள்ளது.
X Chat-யின் முக்கிய அம்சங்கள்
அனைத்து உரையாடல்களும், கோப்பு பரிமாற்றங்களும் End to End Encrypted செய்யப்பட்ட அதாவது குறியாக்கம் செய்யப்பட்டு பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

இந்த X Chat செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
X Chat செயலியில் அனுப்பப்பட்ட செய்தியில் திருத்தம் செய்யவும், முழுமையாக நீக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி வாட்ஸ்ஆப்பில் இருக்கும் அதே வேளையில், வாட்ஸ் ஆப்பை போல் அல்லாமல் X Chat செயலியில் நீக்கம் செய்யப்பட்ட குறியீட்டை எதிர் பயனருக்கு காட்டாது.
X Chat செயலியில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை திரைப்பதிவு செய்ய முடியாது.

மேலும் X Chat செயலி விளம்பரங்கள் இல்லாத சுத்தமான பயனர் தரவை கொண்டுள்ளது.
X Chat செயலியை யாரெல்லாம் அணுகலாம்?
X Chat செயலி ஆனது iOS மற்றும் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், விரைவில் Android-யிலும் செயலி வெளியாகும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |