ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்குத் தொடரும் எலான் மஸ்க்
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க், ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் மீது வழக்குத் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சினை?
வட அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட் நகரில், புலம்பெயர்வோர் ஒருவர் பிரித்தானியர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அந்நகரில் கலவரம் வெடித்தது, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன, வீடுகளும் வாகனங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, பிரித்தானிய தீவிர வலதுசாரியினரான டிம் ராபின்சனும், ரெஸ்டோர் யூகே நிறுவனரான ரூபர்ட் லோவும், சமூக ஊடகமான எக்ஸில் போராட்டக்காரர்களைத் தூண்டிவிடும் வகையில் இடுகைகள் வெளியிட்டார்கள்.

அவர்களுடைய இடுகைகளை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்த எலான் மஸ்க், மீண்டும் மீண்டும், உரத்து எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்று நாட்களுக்குப் பின் பிரபல ஜேர்மன் தொலைக்காட்சிகளில் ஒன்றான ZDF, பெல்ஃபாஸ்ட் வன்முறை தொடர்பில் அரைமணி நேர நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது.
Blanke Lügen nennt man beim ZDF nun "unpräzise und dadurch missverständlich." Dieses Statement des Senders ist - wie schon im KI-Skandal - die nächste Lüge. Die Anmoderation war eben NICHT "unpräzise und dadurch missverständlich", liebes ZDF. Dass Elon Musk zur Jagd auf… https://t.co/KMLzOdOhic pic.twitter.com/cYyPRimngH
— Julian Reichelt (@jreichelt) June 13, 2026
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், நிகழ்ச்சியின் துவக்க உரையாக, இனவெறுப்பு கும்பல் ஒன்று புலம்பெயர்ந்தோரை வேட்டையாடத் துவங்கியது, இந்த விடயத்துக்கு, பிரித்தானிய தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், கோடீஸ்வரரான எலான் மஸ்கும் அழைப்பு விடுத்திருந்தனர் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, அந்த வீடியோவை முன்னாள் ஊடகவியலாளரான ஜூலியன் (Julian Reichelt) என்பவர், சமூக ஊடகமான எக்ஸில் பகிர்ந்தார்.
ஆகவே, தான் கூறிய விடயத்தை திரித்துக் கூறிய ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனமான ZDF மீது வழக்குத் தொடர இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Legal action is being taken against ZDF for their outrageous lies
— Elon Musk (@elonmusk) June 15, 2026
தனது சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ZDF-ன் அப்பட்டமான பொய்களுக்காக, அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |