ட்ரம்பின் மிரட்டல்... ஒரே நாளில் 12 பில்லியன் டொலர்களை இழந்த எலோன் மஸ்க்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கிற்கும் இடையிலான சமீபத்திய மோதல் போக்கு நிதி உலகில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஒரே நாளில் 12 பில்லியன்
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் டெஸ்லா பங்குகள் 5 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்தது. மேலும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட மஸ்க்கின் நிறுவனங்கள் பெறும் மானியங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் பரிந்துரைத்தார்.
ட்ரம்பின் சமீபத்திய செலவு மசோதாவை மஸ்க் விமர்சித்ததோடு, அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இந்த தகராறு குறிப்பிடத்தக்க நிதி தாக்கத்தை ஏற்படுத்தியது, இதனால் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் ஒரே நாளில் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்தது.
ட்ரம்பின் கருத்துக்களைத் தொடர்ந்து, டெஸ்லாவின் பங்கு 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, 300 அமெரிக்க டொலர்களுக்குக் கீழே சரிந்தது, இது மூன்று வாரங்களில் இல்லாத மிகக் குறைந்த விலையாகும்.
வரலாற்றில் எந்த மனிதனையும் விட மஸ்க் அதிக அரசாங்க மானியங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், மஸ்க்கின் நிறுவனங்கள் அரசாங்க உதவி இல்லாமல் பிழைத்திருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரிக்க வேண்டும் என்று ட்ரம்ப்
கடும் இழப்பை எதிர்கொண்டாலும், எலோன் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 395 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. மே மாத இறுதியில் இருந்து, டெஸ்லாவின் பங்குகள் 13% சரிந்துள்ளன.
மஸ்க் மற்றும் ட்ரம்ப் இடையே நடந்து வரும் இந்த மோதல் முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்க உதவிகள் இல்லை என்றால் மஸ்க்கின் நிறுவனங்கள் பூட்டப்பட்டிருக்கும் என்றும்,
மக்கள் வரிப்பணம் எவ்வளவு மஸ்க் நிறிவனங்களுக்கு செல்கிறது என்பதை மஸ்க் உருவாக்கிய DOGE அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மஸ்க், மொத்தமும் ரத்து செய்யுங்கள், பெடரல் அரசாங்கத்தின் அனைத்து ஆதரவை கைவிட தாம் தயார் என்றும் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும், மின்சார வாகனங்கள் நல்ல முயற்சி தான், ஆனால் பொதுமக்களை வாங்க கட்டாயப்படுத்த தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |