ஒரே ஒரு ட்விட்! $50 பில்லியன் பணத்தை இழந்த எலான் மாஸ்க்... அப்படி என்ன பதிவு தெரியுமா?
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் பதிவு செய்த ஒரு ட்வீட்டால் 2 நாட்களில் $50 பில்லியன் பணத்தை இழந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் எலான் மாஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), டெஸ்லா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக உள்ளார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் உள்ள தனது பங்கில் 10 சதவீதத்தை விற்கலாமா என ட்விட்டரில் வாக்கெடுப்பு பதிவு ஒன்றை எலான் மஸ்க் பதிவிட்டார்.
Much is made lately of unrealized gains being a means of tax avoidance, so I propose selling 10% of my Tesla stock.
— Elon Musk (@elonmusk) November 6, 2021
Do you support this?
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகள் விற்கப்படும்போதுதான், அவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக முன்னதாகவே அத்தகைய பங்குகளைக் குறிவைத்து அதிகமான வரி விதிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்மொழிந்தனர்.
இதை தொடர்ந்து இத்தகைய ட்விட்டை அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டெஸ்லா பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதனால் 2 நாட்களில் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.70 லட்சம் கோடி) இழப்பை எலான் மஸ்க் சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2019 இல் மெக்கென்சி ஸ்காட்டிலிருந்து விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 36 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்தார். இதை தற்போது எலான் மாஸ்க் கடந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.