உலக வரலாற்றில் யாரும் தொடாத.,அளவுக்கு உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க் முதலிடம்
அமெரிக்காவில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், புதிதாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.29 லட்சம் கோடியாக இருந்தது.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் (Elon Musk) சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம் கோடியாகும்.
சொத்து மதிப்பில் உச்சம்
ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்பின் வெற்றிக்கு பின், மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் விலையேற்றத்தைக் கண்டதன் மூலம் அவரது சொத்து மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது.
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி
இதன்மூலம் உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத வகையில் எலான் மஸ்க் புதிய உச்சத்தை சொத்து மதிப்பில் தொட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளரான எலான் மஸ்க்கிற்கு, அவரது நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |