உலகின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்! வெளியான பட்டியல்
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப்பணக்காரர்களின் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
உலகின் Top 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் Bloomberg நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மெட்டா நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 20 ஆண்டுகளில், 3 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களுடன் பாரிய அளவிலான சமூக ஊடக தளமாக வளர்ந்துள்ளது.
மெட்டாவின் சந்தை மூலதனம் 1.255 டிரில்லியன் டொலர்கள் ஆகும். இதன்மூலம் இந்நிறுவனம் உலகின் 7வது பாரிய நிறுவனமாக திகழ்கிறது.
எலான் மஸ்க்
இவ்வாறாக இரண்டாவது இடத்தை ஜூக்கர்பெர்க் பிடித்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மஸ்க் தனது பல்வேறு முதலீடுகள் மற்றும் புதுமையான வணிக உத்திகள் காரணமாக முன்னணியில் உள்ளார்.
இவர் டெஸ்லா, ஸ்பேஸ் X, எக்ஸ் வலைத்தளம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 24,590 கோடி டொலர்கள் ஆகும்.
ஜெஃப் பெசோஸ்
மூன்றாவது இடத்தில் உள்ள ஜெஃப் பெசோஸ் தனது நிறுவனத்தின் மூலம் மார்ச் மாதத்தில் பங்கு விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 20,740 கோடி டொலர்கள் ஆகும்.
ஜெஃப் பெசோஸிற்கு அடுத்த இடத்தில் LVMH நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். இவர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மஸ்க்கை விஞ்சி முதலிடத்தில் இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |