நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று அனைவருக்கும் தெரியும்: அருவருப்பானது - ட்ரம்பை சாடிய மஸ்க்
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலோன் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விலகிய மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்த வந்த எலோன் மஸ்க், தற்போது அவரது மசோதாவை எதிர்த்து பேசியுள்ளார்.
அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் இருந்து சமீபத்தில் விலகிய மஸ்க், வரி மற்றும் செலவு மசோதாவிற்குதான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நிர்வாக வரி மற்றும் செலவு மசோதா
ட்ரம்ப் தற்போது வரி மற்றும் செலவு மசோதாவை குறுகிய பெரும்பான்மையை பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளார்.
அடுத்து செனட் சபையில் நிறைவேற வேண்டும். 2017ஆம் ஆண்டில் ட்ரம்ப் கொண்டுவந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது போன்ற முக்கிய அம்சங்கள் 1000 பக்கத்திற்கு மேல் உள்ள இந்த மசோதாவில் அடங்கியுள்ளது.
அத்துடன் குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது.
மசோதாவிற்கு எதிர்ப்பு
இதனை எதிர்த்துதான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், "மன்னிக்கவும், ஆனால் என்னால் இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரிய செலவு மசோதா ஒரு அருவருப்பானது.
இதற்கு ஓட்டளித்தவர்கள் வெட்கப்படுகிறார்கள். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது உங்களுக்குத் தெரியும்" என கூறியுள்ளார்.
முன்னதாக, DOGE என்ற ட்ரம்ப் உருவாக்கிய அமைப்பில் 130 நாட்கள், துறை தலைவராக பணியாற்ற மஸ்க் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |