ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச ஸ்பேஸ்எக்ஸ் பங்கு; எலான் மஸ்க் அறிவிப்பு
elon musk pledges 1 spacex share for every us kid: அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இலவச ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வழங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச ஸ்பேஸ்எக்ஸ் பங்கு
உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ்எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் ஏஐ, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லாவின் CEO ஆக உள்ளார்.

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஒன்றை வழங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
Next year, I will give one of my SpaceX shares to every kid in America. This will be the first of many.
— Elon Musk (@elonmusk) October 19, 2026
"பொது நலனுக்காக" நன்கொடைகளை வழங்கும் ஒரு நிதியில் தனது 5% பங்குகளை வைக்கும் திட்டங்களை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து மஸ்கிடமிருந்து இந்த அறிவிப்பு வெளிவந்தது.
2025 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி அமெரிக்காவில் சுமார் 72 மில்லியன் குழந்தைகள் இருப்பதால், தற்போது ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் விலை 146 டொலராக (இந்திய மதிப்பில் ரூ.13,856) உள்ள நிலையில், இந்த அன்பளிப்பின் மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டொலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.99,651 கோடி) இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, எலான் மஸ்க்கின் தற்போதைய நிகர மதிப்பு 908.5 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.86.21 லட்சம் கோடி) டொலர்களாகும்.
இதில் 700 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.66.43 லட்சம் கோடி) வரை ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் மூலம் கிடைக்கிறது.
ஆனால், குழந்தைகளுக்குத் தனிப்பட்ட பங்குகளை மாற்றுவதற்கான சரியான தகுதி அளவுகோல்கள், வயது வரம்புகள் அல்லது தேவையான சட்டக் கட்டமைப்பு குறித்தும் மஸ்க் விரிவாக விளக்கவில்லை.