ட்ரம்ப் கட்சியினருக்கு ரூ 4,700 கோடி செலவிட்டதை எண்ணி வருந்தும் எலான் மஸ்க்
Elon Musk regrets vast sums to back Republicans: குடியரசுக் கட்சியினருக்காகச் செலவழித்த பெரும் தொகைகள் குறித்து எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.
2024 முதல் டொனால்ட் ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் இயக்கத்துடன் தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்ட போதிலும், எலான் மஸ்க் புதன்கிழமை அன்று தான் MAGA அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று மறுத்துள்ளார்.
வெறும் MAGA மட்டுமல்ல
MAGA என்பதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அது குடியரசுக் கட்சியின் கொள்கைகளை எவ்வித விமர்சனமுமின்றி கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் குறிக்குமானால், நிச்சயமாக என்னிடம் அத்தகைய அணுகுமுறை இல்லை என்று SpaceX மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஆனால், 2024-ல் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய எலான் மஸ்க், நான் வெறும் MAGA மட்டுமல்ல. நான் ஒரு தீவிர, கோதிக் MAGA என அறிவித்தார்.
தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மஸ்க், நியூயார்க் டைம்ஸ் நாளேடு முன்னெடுத்த காணொளி வாயிலான நேர்காணலில் சுமார் 45 நிமிடங்கள் பேசியுள்ளார்.
அதில், அமெரிக்காவில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவது நல்லதாக இருக்கும் என்றும், இரண்டிலும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருப்பதாகத் தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷீல்டு செயற்கைக்கோள் அமைப்பை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொய் கூறியதாகக் குற்றம் சாட்டினார்; பதவியிலிருந்து நீக்கப்பட்ட என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங்கைப் பாராட்டியுள்ளார்.
ரூ 4,700 கோடி
2024-ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு உதவ, மஸ்க் தனது சொந்தப் பணத்திலிருந்து குறைந்தது 250 மில்லியன் டொலர்களை வழங்கினார்; மேலும், சமீபத்தில் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதற்காக சுமார் 500 மில்லியன் டொலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ 4,700 கோடி) தொகையைச் செலவிட்டார், அவர்களில் பெரும்பாலானோர் தோல்வியடைந்தனர்.

தாம் செய்த செலவு பலனளிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்ட மஸ்க்; தேர்தலில் போட்டியிடாத ஒருவர் ஒரு தேர்தல் சுழற்சியில் செய்த செலவுகளிலேயே இதுவே மிக அதிகமானது என்பதால், இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டது குறித்து மிகவும் முட்டாள்தனமாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.