விண்வெளியில் AI: xAI நிறுவனத்தில் அதிரடி மாற்றம்: எலான் மஸ்க்கின் எதிர்கால திட்டம்
xAI நிறுவனத்தை முழுவதுமாக மாற்றியமைப்பதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.
xAI நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு(AI) நிறுவனமான xAI-யில் அதிரடியா நிர்வாக மாற்றங்களை தொடங்கி இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு குறித்து புதன்கிழமை எலான் மஸ்க் அறிவித்துள்ளார், மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே இந்த நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கை தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் பணிகளை விரைவுப்படுத்தல், இலக்குகளை துல்லியமாகத் அடைதல் என சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், சில ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“உயிரினங்களை போல காலத்திற்கு ஏற்ப நிறுவனம் தன்னை தகவமைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேவையற்ற பணி தாமதங்களை குறைத்து, நிறுவனத்தின் செயல்பாடு வேகத்தை அதிகரிப்பதே xAI நிறுவனம் நிறுவனர் எலான் மஸ்க்கின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் xAI நிறுவனம்

சமீபத்தில் xAI நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் விண்வெளி துறையில் xAI நிறுவனத்தின் முக்கியத்துவத்தை மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
xAI - SpaceX நிறுவனத்தின் இணைவு என்பது அதிநவீன கணினி மாதிரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி வன்பொருட்கள் ஒன்றிணைக்கப்படுவதாகவும்.
இதன் மூலம் எதிர்கால விண்வெளி பயணம், வெற்றிகரமான தரையிறக்கம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறைந்து இருக்கும் வகையில் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |