20 டொலர்கள் செலுத்தணுமா? 75 வயது எழுத்தாளர் கேள்வி.. எலான் மஸ்க் கொடுத்த பதில்
20 டொலர்களை நாங்கள் கட்டணமாக செலுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பிய அமெரிக்க எழுத்தாளர்
ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க முடியாது என எழுத்தாளருக்கு பதிலளித்த எலான் மஸ்க்
ட்விட்டரில் Blue Tick வைத்திருக்க 20 டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி பரவிய நிலையில் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் Blue Tick-ஐ தக்க வைத்துக் கொள்ள 20 டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவியது.
இது ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து எலான் மஸ்க் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
ஒரு Blue Tick-க்கு 20 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டுமா? அவர்கள் (ட்விட்டர்) தான் எனக்கு பணம் தர வேண்டும். அப்படி நிறுவப்பட்டால் நான் Enron போய் மாறிவிடுவேன் என அவர் தனது டிவீட்டில் கூறியிருந்தார்.
Patrick Semansky/AP
இதற்கு பதில் கூறிய எலான் மஸ்க், 'நாங்களும் எப்படியாவது கட்டணத்தை செலுத்த வேண்டும்! ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டொலர்களாக இருந்தால் செலுத்துவீர்களா?' என ட்வீட் செய்துள்ளார்.
Getty Images