மதிய உணவு சாப்பிடுவதில்லை - உணவு பழக்கத்தை பகிர்ந்த எலான் மஸ்க்
elon musk reveals his diet plan: பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், 855.8 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில் கேட்டி மில்லரின் பாட்காஸ்டில் கலந்துகொண்ட, எலான் மஸ்க் தனது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து பேசினார்.
எலான் மஸ்க்கின் உணவு பழக்கம்
[WMK34J ]
இதில், காலை உணவாக முட்டை, ஸ்டீக் எனப்படும் இறைச்சி, காபி எடுத்துக்கொள்வேன்.
மதிய உணவு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் மிகச்சிறிய அளவு சாப்பிடுவேன்.
இரவுக்கான உணவுகள், அலுவல் அல்லது சமூகக் கூட்டங்களைப் பொறுத்து மாறுபடும்.
தனக்குப் பிடித்தமானது அமெரிக்க உணவு என்றும், தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால், அது ஒரு சீஸ்பர்கராக இருக்கும் என்றும், பார்பிக்யூ மற்றும் பிரெஞ்சு உணவு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஸ்டீக்கில் உயர்தர புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை உள்ளன. முட்டைகளில் புரதமும் அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன. இது தசை வலிமைக்கும் மூளை செயல்பாட்டிற்கும் நல்லது.
மிதமான அளவில் காபி அருந்துவது கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும். ஆனால், மஸ்க்கின் காலை உணவில் அதிக அளவு புரதங்கள் இருந்தாலும், தேவையான அளவு நார்ச்சத்து இல்லை.
மஸ்க்கின் உணவுமுறை என்பது அவரது தனிப்பட்ட அன்றாட வழக்கத்தின் ஒரு சிறு பகுதியே தவிர, அது அனைவருக்கும் பொதுவான ஒரு ஊட்டச்சத்து பரிந்துரை அல்ல.
ஆரோக்கியமான உணவுப் பழக்கமானது, ஒரு தனிநபரின் ஆற்றல் தேவைகள், உடல்நல நிலைகள், வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் பல்வேறு புரத மூலங்கள் போன்ற பலவகை உணவுகளைச் சேர்ப்பது, ஊட்டச்சத்துக்களை மிக சமச்சீரான முறையில் உட்கொள்வதை உறுதிசெய்ய உதவுகிறது.