ட்விட்டரில் இருந்து இந்திய ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யத் தொடங்கிய எலான் மஸ்க்!
எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது.
நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் உள்ள அனைவரும் நீக்கப்பட்டதாக தகவல்.
ட்விட்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை இந்தியாவில் பெருமளவிலான பணிநீக்கங்களை அறிவித்தது. அதில் பொறியாளர்கள் மற்றும் மொத்த சந்தைப்படுத்தல் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உட்பட அனைத்து துறைகளும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் கட்டளையின்படி உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணிநீக்கம் நடத்தப்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், மொத்தமாக காலி செய்யப்பட இரண்டு துறைகளைத் தவிர, விற்பனை, பொறியியல் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், ட்விட்டரின் இந்திய பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
விற்பனை மற்றும் பொறியியல் துறையில் சிலர் தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த பணிநீக்க நடவடிக்கையை கடந்த வாரமே தொடங்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் தனது இன்னிங்ஸை இந்திய வம்சாவளியினரான தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை நீக்கியத்தில் இருந்து தொடனாகினார்.
அதைனைத் தொடர்ந்து, சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கு (verified account) மாதம் $8 வசூலிக்கும் திட்டங்களை அறிவித்தார்.
ட்விட்டர் இந்தியா இன்னும் பணிநீக்கங்கள் குறித்து அறிக்கையை வெளியிடவில்லை.
பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்களா என்பது குறித்து மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும் என்று ஊழியர்களிடம் கூறிய பின்னர், அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள அதன் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது.