ட்விட்டர் இறந்துகொண்டிருக்கிறது.. இதை செய்ய வேண்டும்: எலான் மஸ்க்
சமகாலத்திற்கு ஏற்ற வகையில் ட்விட்டரில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது ட்விட்டர். பிரபலங்கள் பலரும் ட்விட்டரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டர் இறந்து கொண்டிருப்பதாகவும், சமகாலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அதில் மாற்றங்களை செய்ய ஆலோசனை கூறுங்கள் என்று கடந்த வாரம் ட்விட்டரின் குழுவில் இணைந்த பின்னர் எலான் மஸ்க் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ட்விட்டரில் மிக அதிகளவிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாகவும், குறைந்த சொற்களிலும் ட்விட் செய்கின்றனர்.
9 கோடிக்கும் அதிகமான தொடர்பவர்களைக் கொண்ட டெய்லர் ஸ்விப்ட் மூன்று மாதங்களாக ஒரு பதிவையும் போடவில்லை. இதே போல் ஜஸ்டின் பெய்பரும் 11 கோடிக்கும் அதிகமான தொடர்பவர்களைக் கொண்டிருந்த போதும் ஆண்டு முழுவதும் ஒரே ஒரு பதிவைத் தான் போட்டுள்ளார்.
எனவே வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை ட்விட்டரில் கொண்டு வர உள்ளோம். விரைவில் நீல நிற டிக் கொண்ட பதிவாளர்களுக்கு ட்விட்டரில் edit button அமைக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.