உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்... ஜேர்மன் சேன்ஸலரை மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ள உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், அவரை தனது சமூக ஊடகத்தில், மரியாதை இல்லாமல், மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
உலக அரசியல்வாதி எலான் மஸ்க்?
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பணத்தை வாரி இறைத்து உதவிய எலான் மஸ்க், பிரித்தானியா உட்பட பல நாடுகளின் அரசியலில் தலையிடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.
அவ்வகையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ள எலான் மஸ்க், அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
Scholz should resign immediately. Incompetent fool.
— Duos Marketing Company (@DuosMarketers) December 20, 2024
Elon Musk. pic.twitter.com/Q9kbLP9K0I
சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ’ஷோல்ஸ் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், திறமையில்லாத முட்டாள்’ என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.
ஜேர்மனியிலுள்ள Magdeburg நகரில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில், சவுதி நாட்டவரான மருத்துவர் ஒருவர் தனது காரைக்கொண்டு மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக மோதியதில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஏராளமானோர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதுதான் எலான் மஸ்க் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை மோசமாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே, ஜேர்மனியைக் காப்பாற்ற புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சியால்தான் முடியும் என்று கூறி, ஜேர்மன் அரசியலில் எலான் மஸ்க் மூக்கை நுழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Yes! You are perfectly right, @elonmusk! Please also have a look into my interview on president Trump, how socialist Merkel ruined our country, how the Soviet European Union destroys the countries economic backbone and malfunctioning Germany!https://t.co/PwPgqJgB8w https://t.co/BdCQe3eWwk
— Alice Weidel (@Alice_Weidel) December 20, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |