வருகிறது புதிய அப்டேட் ! ட்விட்டரில் நேரடி குறுஞ்செய்தியில் இனி எமோஜிகளை பயன்படுத்தலாம்
ட்விட்டரில் தனி நபர்களுக்கு நேரடி குறுஞ்செய்தி(DM) அனுப்பும் போது ஸ்மெலி போன்ற எமோஜிகளை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
புதிய அப்டேட்
ட்விட்டரின் தலைமை நிர்வாகியான எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இனி ட்விட்டரில் தனி நபர்களுக்கு அனுப்பப்படும் நேரடி குறுஞ்செய்திகளில்(DM) பல ரியாக்சன்களை வெளிப்படுத்தும் வகையிலுள்ள எமோஜிகளை பயன்படுத்தலாம் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Aiming to roll out ability to reply to individual DMs, use any reaction emoji & encryption later this month
— Elon Musk (@elonmusk) March 5, 2023
பாராட்டிய பயனர்கள்
இந்த அப்டேட்டை வெளியிட்ட பின்பு எலோன் மஸ்கை பின் தொடரும் பயனர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிலொரு பயனர் “இது ஒரு சிறந்த அப்டேட்டாக இருக்கும். மேலும் நேரடியாகக் குறுஞ்செய்தியில் பேசும் போது நமது உணர்வுகளை எளிமையாக எமோஜிகளை கொண்டு வெளிப்படுத்த முடியும்” என ட்விட் செய்துள்ளார்.
@GETTY IMAGES
“அருமை இதை ட்விட்டரின் ஒரு குறையாக நினைத்தேன்.அதைச் சரி செய்து விட்டீர்கள்”என மற்றொரு பயனர் பாராட்டியுள்ளார்.
வரும் பிப்ரவரியில், மைக்ரோ-பிளாக்கிங் தளம் கொண்ட பயனர்களுக்கு அவர்களின் "நெருக்கமான பொருத்தத்திற்கு" தவறான ட்விட்டுகளை சரிசெய்யும் திறனை வழங்கும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார்.