பிரித்தானிய கலவரங்களுக்காக எலான் மஸ்கை கைது செய்யவேண்டும்: முன்னாள் ட்விட்டர் தலைவர் கோரிக்கை
பிரித்தானியாவில், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த கலவரங்களுக்கு, சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளும் ஒரு காரணம்.
இந்நிலையில், சமூக ஊடகமான முன்னாள் ட்விட்டர், இந்நாள் எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் பிரித்தானிய கலவரங்கள் தொடர்பில் தெரிவித்த பல கருத்துக்கள் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
சர்ச்சையை உருவாக்கிவரும் எலான் மஸ்க்
ஏற்கனவே பிரித்தானியா பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவில் உள்நாட்டு யுத்தம் தவிர்க்க இயலாதது என்று எக்ஸில் எலான் மஸ்க் எழுதிய விடயம் பிரித்தானிய அரசியல்வாதிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் தொடர்ந்து விமர்சித்துவரும் மஸ்க், பிரித்தானியாவில் கலவரங்களுக்குக் காரணமானவர்களை ஸ்டார்மர் தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இப்படியே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல மஸ்க் தனது சமூக ஊடகத்தில் செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் எக்ஸ் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது வாரண்ட் தேவை
ட்விட்டரின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிரிவின் முன்னாள் துணைத் தலைவராக பணியாற்றிய Bruce Daisley என்பவர், எக்ஸின் உரிமையாளரான இந்த பணக்காரரை, இப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை மக்களிடையே பரப்ப அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
இப்படி அவர் மக்களின் அமைதியைக் குலைத்துகொண்டே இருப்பாரானால், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் Bruce Daisley.
ஸ்டார்மர் அரசு, பிரித்தானியாவின் ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உடனடியாக மஸ்க் மற்றும் அவரது குழுவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார் Bruce Daisley.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |